இணைந்து இருங்கள்

 
[Eurobird 9] Star Vijay TV has launched in Europe again on Eurobird 9A (9 degree East)


சம்பூரில் மின் நிலையம் அமைக்கும் அரசின் முயற்சியை ததேகூ கண்டிப்பு.
28 December 2006
சம்பூரில் அவசர அவசரமாக அனல் மின்நிலையத்தை நிறுவ அரசு மேற்கொண்டுவரும் முயற்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.
திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் அரசு எடுத்திருக்கும் இத்தீர்மானம் பிழையானது என்றும் தமிழ்ப் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்காகவே அரசு இவ்வாறு செயற்படுகிறது என்றும் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் கருத்துக் கூறுகையில்,
11 ஆயிரம் தமிழ் மக்கள் வாழ்ந்த இடம் சம்பூர். அந்த மக்களைத் திட்டமிட்டு விரட்டி விட்டு அந்த இடத்தை அரசு ஆக்கிரமித்துள்ளது.
விரட்டப்பட்ட மக்கள் இப்போது அகதி முகாம்களில் சீரழிந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் மீண்டும் சம்பூரில் வந்து குடியேறாதவாறு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதற்காகவே அவசர அவசரமாக அங்கு அனல் மின்நிலையத்தை நிர்மாணிக்க அரசு தீர்மானித்துள்ளது. அரசு பொருத்தமில்லாத நேரத்தில் இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறது.
இத்திட்டத்தைத் தொடங்குவதற்கு முன் அரசு எம்மிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யவில்லை. காயப்பட்ட தமிழ் மக்களின் துயரை ஆற்று வதற்குப்பதிலாக அவர்களை மேலும் மேலும் காயப்படுத்தவே அரசு முனைகிறது.
அரசின் இத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவது பற்றி அரசு உடனடியாக மீள் பரிசோதனை செய்ய வேண்டும். எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
posted by Norsri @ Thursday, December 28, 2006  
தமிழர் தாயகப் பிரிப்பு பெரும் சந்தேசகத்தை ஏற்படுத்தியுள்ளது - ஜெயானந்தமூர்த்தி
24 December 2006
வடகிழக்கு மாகாணத்தை பிரித்து வடக்குக்கு வேறாகவும் கிழக்குக்கு வேறாகவும் இரு நிருவாக அலகுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தை மாத்திரம் கிழக்கிலிருந்து வேறாக்கி தனி நிருவாக அலகு உருவாக்கப்பட்டுள்ள செயலானது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தமிழர் தாயகத்தைத் துண்டாடும் சிங்கள பேரினவாதத்தின் ஒரு திட்டமிட்ட செயலாகுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றவென்றே மாகாணசபை முறைமை சிறிலங்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 1987 ஆம் ஆண்டு அப்போதைய சிறிலங்கா ஐனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் இந்திய பிரதமர் ராஐPவ் காந்தியும் செய்து கொண்ட இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற வகையில் மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. இதன்பிரகாரம் தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு வடகிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டது.
ஆனால் அந்த மாகாணசபை திட்டம்கூட யாருடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்டதோ அதன்படி தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்குவம் வகையில் அது செயற்படவில்லை. மாறக சிறிலங்காவில் வடகிழக்கு மாகாணத்தைத் தவிர எனைய பகுதியில்தான் அது சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் வடகிழக்கு மாகாணசபைக்கு சிங்கள ஆளுனர் நியமிக்கப்பட்டு சிறிலங்கா அரசின் நேரடி கண்காணிப்பில் அது இயங்கியதுடன் தமிழ் மக்களின் எந்தவொரு அபிலாசசைகளையும் இம்மாகாணசபை நிறைவேற்றவில்லை. இதனால் மாகாணசபை முறையில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்தவர்களாக இருந்தனர்.
இந்த வகையில் வடகிழக்கு தாயகத்தை கூறு போடும் சிங்கள பேரினவாதத்திட்டத்தின் படி ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவின் அனுசரணையுடன் வடகிழக்கு மாகாணம் இரு மாகாணங்களாக பிரிக்கப்பட்டு தற்போது அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு எதிர்வரும் ஐனவரி மாதத்துடன் நிருவாக அலகுகள் இயங்கவுள்ளன. எனினும் கிழக்கு மாகாணத்திலிருந்து திருகோணமலை மாவட்டம் தனி அலகாகப் பிரிக்கப்பட்டு தனி நிருவாக அலகு உருவாக்கப்பட்டுள்ளது. இது தமிழர் தாயகத்தைத் துண்டாடும் பாரிய சதி என்பதுடன் தமிழர் தாயகத்தின் தலைநகரை சிங்கள மயமாக்கும் ஒரு நடவடிக்கையாகவும் உள்ளது.
சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கையானது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுடன் திருகோணமலை மாவட்டத்தை எதிர்காலத்தில் வடமத்திய மாகாணத்துடன் இணைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதனால் சிறிலங்கா அரசு தற்போது அவசர அவசரமாக வடகிழக்கு மாகாணத்தைத் துண்டாடி மூன்று நிருவாக அலகுகள் அமைத்துள்ள நடவடிக்கையானது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் தற்போதைய இனப்பிரச்சினைத் தீர்வானது இதனால் இன்னும் மோசமடையக் கூடிய நிலையே தோன்றும் என்பதுடன் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்திய பிரதான சக்தியான இந்தியாவின் நோக்கத்தையும் சிதறடிக்கும் செயலாகவும் உள்ளது. ஏனெனில் வடகிழக்கு மாகாணம் இணைந்திருக்க வேண்டும் என்பதையே தற்போதும் இந்தியா வலியுறுத்தி வருகின்றது. இதை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சிறிலங்கா ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவிடம் அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன் தமிழ் மக்களின் எந்தவொரு கருத்தையும் கேட்டறியப்படாமல் இவ்வாறு வடகிழக்கு மாகாணம் கூறுபோடப்படுவதை தமிழ் மக்கள் முற்றாக எதிர்த்துள்ளதுடன் கிழக்கு மாகாண மக்கள் இணைந்த வடகிழக்கு தாயகமே தமது பூர்வீகத்தாயகம் என்பதில் உறுதியாக உள்ளதுடன் வடகிழக்கு இணைந்தே இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.
posted by Norsri @ Sunday, December 24, 2006  
மதியுரைஞரின் இறுதி நிகழ்வுகள்
16 December 2006
தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள், எதிர்வரும் 20ஆம் நாள் புதன்கிழமையன்று லண்டனில் இடம்பெற இருக்கின்றன.
அன்றைய நாளில், பின்வரும் மண்டபத்தில் காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணிவரை, மதியுரைஞரின் வித்துடல் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டு வீர வணக்க நிகழ்வு நடைபெறும்.
வீர வணக்க நிகழ்வு இடம்பெறும் மண்டபம்:
Alexandra Palace
Alexandra Palace Way
Wood Green
London N22 7AY
விடுதலைக் கனலை இதயத்தில் சுமந்து, தமிழ் மக்களையும், தமிழீழ மண்ணையும் ஆழமாக நேசித்து, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அயராது அரும் பணியாற்றி, தமிழினத்தின் விடியலை தரிசனமாகக் கொண்ட தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வித்துடலுக்கு மலர் தூவி வணங்குவோம் வாருங்கள்.
posted by Norsri @ Saturday, December 16, 2006  
தமிழர் தாயகத்தில் மூன்று நாள்களுக்கு தேசிய துக்கதின
மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவை யொட்டி தமிழர் தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் இன்று முதல் மூன்று நாள்களுக்கு தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என நேற்றிரவு வன்னியில் அறிவிக்கப்பட்டது.

இத்தினங்களில் கோலாகல கொண்டாட்ட நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டு மௌனாஞ்சலிகள், இரங்கல் நிகழ்வுகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட் டது.
posted by Norsri @ Saturday, December 16, 2006  
பாலாண்ணைக்கு "தேசத்தின் குரல்" கௌரவம்: தமிழீழத் தேசியத் தலைவர் அறிவிப்பு
எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டு நிரப்பமுடியாத பேரிழப்பு.பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனித வாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் நெடுத்து கூடிக்குறைந்து செல்கிறது. துரதிர்ஸ்டவசமாக, பாலாண்ணையினது வாழ்வு இடைநடுவில் நின்றுபோய்விட்டது. தீவிரம் பெற்றுள்ள எமது விடுதலைப் போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்ற வேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து, நெஞ்சத்தைப் பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறு போல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்டமுடியாது. மனித மொழியில் இதற்கு இடமுமில்லை.பழக ஆரம்பித்த நாள் முதலே எமக்கிடையே ஒரு இனம்புரியாத புரிந்துணர்வு ஏற்பட்டது. அந்தப் புரிந்துணர்வால் எழும் பற்றுறவால் பிணைந்துகொண்டு, எமது உறவு நல்லுறவாக வளர்ந்து நட்புறவாகப் பரிணமித்தது. சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்ட மனிதர்களின் சங்கமமாக அந்த உறவு மலர்ந்தது. தினம்தினம் நாம் பகிர்ந்துகொண்ட வாழ்பனுபவத்தில் வலிமைபெற்று வளர்ந்தது. சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. காலத்தால் கனிந்து, வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு அது.பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடியபோதும், தாங்கமுடியாத உடல் உபாதைகளால் வருந்திய போதும், தளர்ந்து போகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது.எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.ஈழத்தமிழினம் பெருமை கொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து "தேசத்தின் குரல்" என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்.


புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்
posted by Norsri @ Saturday, December 16, 2006  
பிரதான செய்திகள்
பெட்டகம்
இணையசெய்திகள்
தொலைக்காட்சிகள்
வானொலிகள்
குழந்தைப் பெயர்கள்
தொழில்நுட்பம்
பாடசாலை தளங்கள்
அறுசுவை
MP3 பாடல்கள்
திருமண தளங்கள்
குழந்தைகளுக்கானபக்கம்
கவிதைகள்
தமிழ் சஞ்சிகைகள்
சினிமா பக்கங்கள்
சமூக இணைப்புகள்
நடிகர்கள் தளங்கள்
  • விளம்பரம்
  • கம்ப்யுட்டர் கல்வி
    நான் பார்ப்பவை



    free web counter

    Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

    Listed in tamizmaNam.com, 
 where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    More than a Blog Aggregator


    BLOGGER