இணைந்து இருங்கள்

 
[Eurobird 9] Star Vijay TV has launched in Europe again on Eurobird 9A (9 degree East)


இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு அரசியல் தீர்வே..
29 November 2006
இலங்கை இனப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு பேச்சு வார்த்தை மூலமான அரசியல் தீர்வே என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரை தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த கருத்தை ஐக்கிய தேசிய கட்சி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் சகல இன மக்களின் அபிலாசைகள் தீர்க்கப்படும் வகையில், அரசியல் தீர்வு அமைய வேண்டும். பெரும்பான்மையான தமிழ் மக்களின், ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வொன்றையே எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும், வன்முறைகள் பரவி வருவதுடன், வட கிழக்கில் வாழும் மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒரு காரணம் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, கடந்த ஜனாதிபதி தேர்தலில், வட கிழக்கு மக்கள் தமது வாக்கை பயன்படுத்துவதை தடுத்ததாக குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தடுக்கப்பட்டது. அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தால், 2002 2003 ம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட சமாதான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இணைத்தலைமை நாடுகள் கூறியுள்ளது போல் மனிதாபிமான விடயங்களை அரசியல்படுத்தாமல், அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்திற்காக சகல கடல் மற்றும் தரை வழிப்பாதைகளை திறக்குமாறும் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது
posted by Norsri @ Wednesday, November 29, 2006  
ஏ-9 திறக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க புலிகள் முடிவு.
26 November 2006
ஏ-9 திறக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க புலிகள் முடிவு: இளந்திரையன்ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் எதிர்வரும் வாரங்களில் திறக்காவிட்டால் நடவடிக்கை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.கொழும்பு ஆங்கில வார ஏட்டுக்கு இளந்திரையன் தெரிவித்துள்ள கருத்து: நீண்டகாலமாக ஏ-9 பாதை மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் பட்டினிச் சாவை நோக்கி உள்ளனர். ஏ-9 பாதை மூடப்பட்டமையானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகும்.எதிர்வரும் வாரங்களில் அரசாங்கம் இதுவிடயத்தில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாவிட்டால் நடவடிக்கை எடுக்கவும் நாம் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினோம். ஒரே ஒரு வாகனத் தொடரணிக்காக நாங்கள் ஏ-9 பாதையை திறக்க முடியாது. எந்த விலை கொடுத்தாலும் நாங்கள் திறக்கமாட்டோம். ஐ.நாவே கேட்டுக்கொண்டாலும் திறக்க முடியாது. யாழ்ப்பாண குடாநாட்டுக்கு தொடர்ச்சியாக உணவுப் பொருட்கள் விநியோகம் சென்றடைய வேண்டும் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் இளந்திரையன்."ஏ-9 பாதையை திறந்து உணவுப் பொருட்கள் வாகனத் தொடரணியை அனுப்புவது குறித்து சிறிலங்கா சமாதான செயலகத்தினருடன் ஆலோசனை நடத்தினோம்" என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொர்பினூர் ஓமர்சன் தெரிவித்தார்
posted by Norsri @ Sunday, November 26, 2006  
உணவுப் பொருட்கள் முற்றாக தீர்ந்தன...
யாழ்குடாநாட்டில் வணிக நிலையங்களில் ஒருவாரத்திற்கு போதுமான உணவுப்பொருட்கள் இருப்பதாகவும் குடாநாட்டின் களஞ்சியங்களிலும், கூட்டுறவு சங்கங்களிலும் உணவுப்பொருட்கள் முற்றாக தீர்ந்துள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் குடாநாட்டிற்கான உணவுப்பொருட்களை சிறிலங்கா அரசாங்கம் அனுப்பத்தவறின் மக்கள் ஒருநேர உணவை கூட உட்கொள்ளமுடியாது என மனிதநேய அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இதேவேளை குடாநாட்டில் தற்போது விநியோகிக்கப்படும் தேயிலை பாவனைக்கு உகந்தவை அல்ல எனவும் இவற்றை அருந்துவோர் புற்றுநோய்க்கு உள்ளாக நேரிடுவர் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
posted by Norsri @ Sunday, November 26, 2006  
நாடாளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பு
24 November 2006
சிறீலங்கா டெலிகொம் நிறுவன பணியாளர்கள் வேதன உயர்வு உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து; இன்று நாடாளாவிய ரீதியில் அடையாள பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
இப்பணிபுறக்கணிப்பில் 20 தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களான சுமார் ஏழாயிரம் பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக டெலிகொம் நிறுவன பணியாளர்களின் பாவனையாளர்களுக்கான அன்றாட பணிகள் யாவும் இன்று முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
posted by Norsri @ Friday, November 24, 2006  
சிறீலங்காவில் ஊடக சுதந்திரம் பாதிப்பு..
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஐித சேனாரட்ன நாடாளுமன்றத்தில் யுத்தம் காரணமாக ஊடக சுதந்திரம் பெருமளவு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஊடக துறை அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உiராயாற்றும் போது நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமானால் ஊடக சுதந்திரத்தை நிலை நிறுத்த வேண்டும் என அவர் சுட்டிகாட்டினார்.
posted by Norsri @ Friday, November 24, 2006  
தேசிய விருதுக்கு ஈ படம்,
23 November 2006
ஜீவா, நயன்தாரா நடித்த ஈ படம் தீபாவளிக்கு ரிலீசானது. இந்த படத்துக்கு கூடுதல் பெட்டிகள் கேட்டு வினியோக தரப்பில் வற்புறுத்தப்படுகிறது. இதையடுத்து கூடுதலாக 25 பிரிண்ட்கள் போட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி முடிவு செய்துள்ளார். தேசிய விருதுக்கு ஈ படத்தை அனுப்பப்போவதாகவும் அவர் கூறினார்.ஈ படத்தில் வித்தியாசமான கேரக்டர் பண்ணியதற்காக பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிவதாக ஜீவா தெரிவித்தார். திரையுலகில் தனக்கு திருப்புமுனையை ஈ படம் ஏற்படுத்தியதாகவும் கூறினார்.ஈ படத்தில் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து பெரிய 10 நடிகர்கள் பட்டியலில் ஜீவா இடம்பிடித்துள்ளார் என்று டைரக்டர் ஜனநாதன் கூறினார். ஈ படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
posted by Norsri @ Thursday, November 23, 2006  
சிவாஜி படப்பிடிப்பு: ரஜினி, ஸ்ரேயா அமெரிக்கா பயணம்
21 November 2006
ரஜினி நடிக்கும் சிவாஜி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. 50 சதவீதத்துக்கு மேல் படப்பிடிப்பு முடிந்துள்ளது. புனேயில் நயன்தாராவின் நடன காட்சி படமாக்கப்பட்டது. அத்துடன் கல்லூரி காட்சிகளும் எடுக்கப்பட்டன.கதைப்படி அமெரிக்காவில் வாழும் கோடீசுவர இந்தியரின் மகனான ரஜினி தமிழக மக்களுக்கு சேவை செய்ய பணத்துடன் வருகிறார். பள்ளி, கல்லூரிகள் தொடங்கி உதவி செய்கிறார். ஏழைகளுக்கு இலவச கல்வி கொடுக்கிறார். இதனால் மக்கள் மத்தியில் பிரபலம் அடைகிறார். அவர் மீது எரிச்சல்படும் அரசியல் வாதிகள் பொய் வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்புகிறார்கள். சொத்துக்கள் பறிபோகிறது. ஏழையா கும் அவர் மீண்டும் பணக்கார ராகிறார்.சிவாஜிக்காக புனேயில் உள்ள கம்ப்ïட்டர் நிறுவனங்களில் சிவாஜி யுனிவர்சிட்டி கல்லூரி என்றெல்லாம் பெயர் பலகைகள் வைத்து ஆடம்பரமாக படமாக்கப்பட்டது.கல்லூரியை ரஜினி திறப்பது போல் காட்சிகள் எடுக்கப்பட்டன. மாணவர்களை அந்த கல்லூரியில் ரஜினி சேர்த்து இலவசமாக படிக்க வைக்கும் காட்சிகளும் எடுக்கப்பட்டுது. அடுத்த கட்டமாக அமெரிக்காவில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.சிவாஜியில் ரஜினிக்கு இரட்டை வேடம் தந்தை, மகன் கெட்டப்பில் நடிக்கிறர். தந்தை கேரக்டர் அமெரிக்காவில் தொழில் அதிபராக இருப்பது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளது. தந்தை கெட்ப்புக்காக ரஜினி நடித்த பழைய படங்களின் ஸ்டில்களை டைரக்டர் ஷங்கர் பார்த்து அதிலிருந்து தலையில் வகிடெடுத்துள்ள தோற்றத்தை தேர்வு செய்துள்ளார். அதே கெட்டப்பில் தந்தை பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த தோற்றத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்படுகின்றன. டூயட் பாடல் காட்சியும் படமாக்கப்படுகிறது.இதற்காக ரஜினி, ஸ்ரேயா, டைரக்டர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்கள்.சிவாஜி படத்தில் பிரபு தேவா நடன பயிற்சி அளித்துள்ளார். 10 நாட்கள் இந்த நடன காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன. ரஜினி வளைந்து நெளிந்து அபாரமாக ஆடி நடித்ததாக பிரபுதேவா கூறினார்.வில்லன் பாத்திரத்தில் சுரமன் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. ரஜினி நண்பராக ரகுவரன் நடிக்கிறார். ரகுவரன் நடிக்கும் காட்சிகளும் புனேயில் படமாக்கப்பட்டு விட்டது.சிவாஜி படத்தில் ரஜினி அறிமுக பாடல் ஒன்று இடம்பெறுகிறது. எஸ்.பி.பால சுப்பிரமணியம் பாடியுள்ளார். இந்த பாடல் காட்சியும் புனேயில் படமாக்கப்பட்டது. 5 ஆயிரம் துணை நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்றவையும் இப்பாடல் காட்சியில் படமாக்கப்பட்டது.சிவாஜி படத்தில் ரஜினி உடுத்தும் ஆடைகள் இதுவரை இல்லா அளவிற்கு மிகவும் வித்தியசமாகவும், ஸ்டைலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், ஐஸ்வர்யாராய், ப்ரீத்தாஜிந்தா, ராணிமுகர்ஜி போன்ற பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருப்பவரான மணிஷ் சிவாஜி படத்திற்கு அடை ஆலங்காரம் செய்கிறார்.
posted by Norsri @ Tuesday, November 21, 2006  
ஜேம்ஸ்பாண்ட் படம் ரூ.400 கோடி வசூல்..
ஜேம்ஸ்பாண்ட் படம் ரூ.400 கோடி வசூல்: திரையிட்ட 3 நாளில் சாதனை
ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கு 3 நாளில் ரூ. 400 கோடி வசூலாகியுள்ளது. உலக சினிமா ரசிகரக்ளின் நிஜ ஹீரோ ஜேம்ஸ்பாண்ட் பிரிட்டீஷ் எழுத்தாளர் பிளமிங் 1953ல் தனது நாவலில் இந்த பாத்திரத்தை புகுத்தினார்.ஜேம்ஸ்பாண்ட் கதைகளுக்கு உலகெங்கும் வரவேற்பு அதிகரிக்க அந்த கேரக்டர் சினிமாவில் புகுத்தப்பட்டது.முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் டாக்டர் நோ ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் சீன்கானரி நடித் தார். அந்த படம் வசூலை வாரி குவித்தது.இதுவரை 20 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வெளியாகியுள்ளது. இவற்றில் சீன்கானரி ஜார்ஜ் வாசன் பை, ரோஜர்மூர், டி மோத்திடால்டன், தியர்ஸ் பிரஸ்னன் ஆகிய 5 பேர் ஜேம்ஸ்பாண்ட் வேடமேற்று நடித்துள்ளனர். சீன்கானரி, ரோஜர்மூர், பியர்ஸ் பிரஸ்னன் ஆகிய மூவரும் ஜேம்ஸ்பாண்ட் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தினர்.முதல் படத்தில் இருந்து இன்று வரை ஜேம்ஸ்பாண்ட் அறிமுகம் அமர்க்களமாக இருக்கும். பாண்ட் ஜேம்ஸ் பாண்ட் என் அவர் தன்னை ஸ்டைலாக அறிமுகப்படுத்தும் சீன் பிரபலம்.முந்தைய படங்களை போல்வே 4 ஆண்டு இடை வெளிக்கு பின் கடந்த 17-ந்தேதி வெளியான கேஸினே ராயல் ஜேம்ஸ்பாண்ட் படமும் சக்சை போடு போடுகிறது.தீவிரவாதிகளை மைய மாக வைத்து இப்படம் எடுக்கப் பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு பணம் எங்கிருந்து சப்ளை ஆகிறது என்பதை ஜேம்ஸ் பாண்ட் துப்பறிகிறார். கேசினோ ராயல் என்ற சூதாட்ட கிளப்பில் இருந்து கோடி கோடியாய் பணம் அனுப்பப்படுவதை கண்டு பிடிக்கிறார். அங்கு சூதாட்டம் ஆடும் கில்லாடி தீவிரவாதி ஆட்டத்தில் ஜெயித்து கோடி கோடியாய் பணத்தை பயங்கரவாதிகளுக்கு அனுப்பு கிறான்.அவனை வீழ்த்த ஜேம்ஸ் பாண்ட் ஆட்டத்தில் குதிக்கிறார். முதலில் வில்லனிடம் தோற்று 70 கோடிக்கு மேல் தோற்கிறார். பிறகு கடைசி ஆட்டத்தில் ஜெயித்து வட்டியும் முதலுமாய் 600 கோடி ரூபாய் ஜெயித்து எதிரியை வீழ்த்துகிறார்.உலகம் முழுவதும் இப் படம் ஒரே நாளில் ரிலீசாகி பரபரப்பாக ஓடுகிறது. 650 கோடி ரூபாய் செலவில் இந்த படம் தயாரிக்கப்பட்டது. திரையிட்ட 3 நாளில் 400 கோடியை வசூலித்துள்ளது. வசூலில் முந்தைய ஜேம்ஸ்பாண்ட் படங்களை இது முறியடிக்கும் என்று விநியோகஸ்தர்கள் நம்புகிறார்கள்.
posted by Norsri @ Tuesday, November 21, 2006  
சர்வதேச விமானநிலையத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்து...
20 November 2006
நேற்று சிறிலங்கா ஜனாதிபதியால் 250 கோடி ரூபா செலவில் இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்துக்குரிய அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்த விமானநிலையம், ஆயிரத்து 150 ஹெக்டயர் நிலப்பரப்பைக் கொண்டுள்ள பிரதேசத்தில், நான்கு கிலோ மீட்டர் நீளமான ஓடுபாதைகளைக் கொண்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் அனைத்தும் எதிர்வரும் 2009 ம் ஆண்டளவில் நிறைவடையவுள்ளன
posted by Norsri @ Monday, November 20, 2006  
மாவீரர் வாரம் ஆரம்பம்...
19 November 2006
மாவீரர் வாரம் 20ஆம் திகதி திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையும் வடகிழக்குப் பகுதிகளில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அஞ்சலி நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன் படிக்கையின் பின்னர் மாவீரர் தின நிகழ்வுகள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் இடம் பெற்றன.அத்துடன் வடக்கு, கிழக்கில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களிலும் உறவினர்களின் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றன.தற்போதைய சூழ் நிலையில் இவை இப்பகுதிகளில் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
posted by Norsri @ Sunday, November 19, 2006  
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஜெனீவா கண்டனப் பேரணி...
16 November 2006

தமிழ் மக்கள் மீதான சிங்கள அரசின் படுகொலைகளை நிறுத்தக் கோரியும், வாகரை படுகொலையைக் கண்டித்தும், நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் படுகொலையைக் கண்டித்தும் சுவிஸ் ஜெனீவா நகரில் நேற்று புதன்கிழமை மாபெரும் கண்டன ஆர்பாட்டப் பேரணி நடைபெற்றது.
அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்டு நடைபெற்ற இந்தப் பேரணி, ஜெனீவா தொடரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமாகி ஜெனீவா மனித உரிமை மன்ற, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற காரியாலயம் வரை சென்றது.சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுவிஸ் வாழ் தமிழர்கள் இப்பேரணியில் பங்கேற்றனர்.கடுமையான குளிரின் மத்தியிலும் சிறுவர்களும், குழந்தைகளுடன் தாய்மாரும் தீப்பந்தங்களைச் சுமந்தபடி பங்கேற்றிருந்த இக்கண்டன ஆர்பாட்டப் பேரணி, மிகவும் உணர்ச்சிகரமாகவும் சுவிஸ் மக்களின் கவனத்தையும் ஈர்த்தது.சுவிஸ் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பேரணியியின் நிறைவில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பாக மனு வழங்கப்பட்டது.
posted by Norsri @ Thursday, November 16, 2006  
படுகொலைகளைக் கண்டித்து மகிழடித்தீவில் நாளை கண்டனப் பேரணியும், மகஜர் கையளிப்பும்
12 November 2006
மட்டுவாகரை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி தமிழ் மக்களை சிறிலங்கா இராணுவம் மிலேச்சத்தனமாக படுகொலை செய்தமையைக் கண்டித்து நாளை திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கண்டனப் பேரணி இடம் பெறவுள்ளது.மட்டக்களப்பு மாவட்ட வெகுஜன அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெறும் கண்டனப் பேரணி காலை 10.00 மணிக்கு கொக்கட்டிச்சோலை தான்தோன்றிஸ்வரர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகி மகிழடித்தீவு நினைவுத் தூவி முன்றலை சென்றடையும்.இந்த நிகழ்வின் போது கடந்த 10ம் திகதி கொழும்பு பொரளை மாதா வீதிக்கு அருகில் வைத்து சிங்கள அரசின் உதவியுடன் சுட்டுக் கொல்லப்பட்ட மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களுக்கான நினைவு கூரல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.அத்துடன் இந்த படுகொ லைகளை கண்டித்து மகஜர் கையளி க்கப்படவுள்ளது. எனவே இந்த பேரணியில் தமிழ்தேசியத் பற்றாளர்கள், மற்றும் அரச, அரசார்பற்ற நிறுவ னங்களின் பணியாளர்கள், வர்த்தக உரிமையாளர்கள், விவசாய அமை ப்பு, மகளிர் அமைப்பு, வாகன சங்கங்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.இதேவேளை மட்டக்களப்பு நகரிலும் திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு இதே நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விலும் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது
posted by Norsri @ Sunday, November 12, 2006  
நாகர்கோவில் கடற்பரப்பில் மோதல் டோரா மூழ்கடிப்பு...
09 November 2006
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடற்சமர் இடம்பெற்றுள்ளது. இன்றை கடற்சமரில் சிறீலங்காப் படையினரின் டோரா பீரங்கிப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டதோடு மேலும் ஒரு டோராப் படகு சேத்திற்கு உள்ளாகியுள்ளது. மோதலின் போது சிறீலங்காப் கடற்படையினர் 18 பேரைக் காணவில்லை என சிறீலங்காத் தரப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று மாலை 5.35 மணியளவில் நாகர்கோவில் கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்ட கடற்புலிகள் மீது வலிந்த தாக்குதலைத் தொடுத்த கடற்படையினர் மீதே விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை நடத்தியுள்ளனர் என விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் ஐ.இளந்திரையன் தெரிவித்துள்ளார்.முதலாவது தாக்குதலில் சிறீலங்காப் படையினரின் அதிவேக டோராப் படகு மூழ்கடிக்கப்பட்டதோடு அதிலிருந்து 18 கடற்படையினரும் காணவில்லை எனத் தெரிவித்த போதும் அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.இதனையடுத்து பிறிதொரு மோதல் மாலை 6 மணியளவில் இடம்பெற்றது இதன் போது சிறீலங்கா கடற்படையினரின் அதிவேக டோராப் பீரங்கிப் பகுதி தீப்பற்றி எரிந்து பெரும் தேசத்திற்கு உள்ளாகியுள்ளது எனத் தெரியவருகின்றது.
posted by Norsri @ Thursday, November 09, 2006  
மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவ வேண்டும்...


இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவ வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சொந்த நாட்டு மக்களையே யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசு முற்றுகை இட்டுள்ளது. அங்குள்ள லட்சக்கணக்கான மக்கள் உணவு மருந்து இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்துக்கு செல்லும் ஒரே நெடுஞ்சாலைப்பாதையையும் இலங்கை இராணுவம் முடக்கி வைத்துள்ளது. தமிழர் பகுதிகளை முப்படை கொண்டு இலங்கை அரசு தாக்கி வருகிறது. மேலும் முக்கிய உணவுப் பொருட்களை செல்ல விடாமல் தடுக்கிறது. இதன் மூலம் தமிழ் இனப்படுகொலையை செய்து வருகிறது. இலங்கை அரசின் காட்டுமிராண்டித்தனமான இப்போக்கை தடுத்து நிறுத்தி அங்குள்ள தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ இந்தியா முன்வரவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து தனது இராணுவத்தை இலங்கை அரசு திரும்பிப்பெற இந்திய அரசு வற்புறுத்த வேண்டும். தமிழர் பகுதிகளில் அமைதி ஏற்படவும் அங்கு பேச்சுவார்த்தை மூலம் நியாயமான தீர்வு காணவும் இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
posted by Norsri @ Thursday, November 09, 2006  
சர்வதேசம் அங்கீகரித்தால்...
08 November 2006
சர்வதேச சமூகத்தை புறக்கணித்துவிட்டு எம்மால் எதனையும் சாதிக்கமுடியாது. அதேவேளை, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று தபால், தொலைத்தொடர்புகள் அமைச்சர் தி.மு. ஜயரட்ண நேற்று சபையில் தெரிவித்தார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது...
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. இனப்பிரச்சினையின் காரணமாக மக்கள் தினமும் கஷ்டப்படுகின்றனர். ஏன் இனப்பிரச்சினையை எம்மால் இதுவரை தீர்க்கமுடியாமல் உள்ளது? என்பதனை சிந்திக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை தீர்க்காவிடின் எதிர்கால சந்ததியினர் எமக்கு சாபமிடுவர். சில சமயங்களில் எம்மால் தீர்மானங்களை மேற்கொள்ள முடியாமல் உள்ளது. வரலாற்று விடயங்களை நாம் மீட்டிப்பார்க்க வேண்டும். எமது நாட்டுப்பிரச்சினைக்கு 20 வருடங்கள் கடந்துவிட்டன.
உலகில் ஏதாவது ஒரு நாடு தனிநாடு என்ற அந்தஸ்தை நாட்டின் ஒரு பகுதியினருக்கு வழங்கிவிட்டால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. சர்வதேசத்தை புறக்கணித்துவிட்டு எம்மால் எதனையும் சாதிக்கமுடியாது. ஆனால் நாட்டு மக்களை, பாதுகாப்பது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் கடமையாகும். அரசாங்கம் யுத்தம் செய்யவில்லை. மாறாக பாதுகாப்பை உறுதிப்படுத்தியே வருகின்றது. ஒன்றையாட்சியா? ஐக்கிய ஆட்சியா? என்பது முக்கியமில்லை. மாறாக பிரிபடாத நாட்டிற்குள் பிரச்சினைக்கான தீர்வு அமைய வேண்டும்
posted by Norsri @ Wednesday, November 08, 2006  
வாகரையில் பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள்...
சிறீலங்கா இராணுவத்தினர் இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு வாகரை பாடசாலை மீது மேற்கொண்ட பல்குழல் எறிகணை வீச்சுத் தாக்குதலில் பாடசாலையில் தஞ்சம் புகுந்திருந்த 47 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இராணுவ நடவடிக்கை காரணமாக மூதூர் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வாகரைப்பகுதியில் உள்ள கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் தங்கியிருந்த பொதுமக்களே இந்த அவலத்திற்கு உள்ளாகி உள்ளனர்
posted by Norsri @ Wednesday, November 08, 2006  
கண்காணிப்புக் குழுத் தலைவர் உயிர் தப்பினார்...

பூநகரி இறங்குதுறையைப் பரிசீலிப்பதற்காக உத்தியோகபூர்வமாக சென்ற கண்காணிப்புக் குழுவினரை நோக்கி சிறிலங்கா இராணுவம் எறிகணை வீச்சுத் தாக்குதலை இன்று புதன்கிழமை நடத்தியுள்ளது.
ஏ-9 பாதைக்குப் பதிலாக பூநகரி இறங்குதுறையைப் பயன்படுத்தலாம் என்று சிறிலங்கா அரசு யோசனை தெரிவித்திருந்தது. ஆனால் அரசின் தாக்குதல்களால் பூநகரி இறங்குதுறை ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது எனவும் இவ்வாறான போக்குவரத்திற்கு அது உகந்ததல்ல எனவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பூநகரி இறங்குதுறையைப் பரிசீலிப்பதற்காக, சிறிலங்கா அரசின் முன்கூட்டிய அனுமதியைப் பெற்று கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் லார்ஸ் ஜோகன் சொல்பேர்க் இன்று பிற்பகல் தனது குழுவினருடன் அங்கு சென்றிருந்தார்.இந்நிலையில் கண்காணிப்புக் குழுத்தலைவர் நின்றிருந்த பகுதியை நோக்கி சிறிலங்கா இராணுவம் பிற்பகல் 3.15 மணியளவில் எறிகணைத் தாக்குதலை நடத்தியது. சுமார் 7 எறிகணைகள் கண்காணிப்புக் குழுவினர் நின்றிருந்த இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் வீழ்ந்து வெடித்துள்ளன.
எனினும் அதிர்ஸ்டவசமாக கண்காணிப்புக் குழுவினர் இத்தாக்குதலில் இருந்து உயிர் தப்பியுள்ளனர்.
posted by Norsri @ Wednesday, November 08, 2006  
யாழ். குடாநாட்டுக்கு உணவுப் பொருட்களை...
07 November 2006
யாழ். குடாநாட்டுக்கு உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அதிகாரிகள் நாளை புதன்கிழமை கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
கொழும்பு வரும் இவர்கள் உணவு விநியோகம் தொடர்பில் அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். மனித உரிமைகள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அழைப்பின்பேரிலேயே ஐ.நா. பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
posted by Norsri @ Tuesday, November 07, 2006  
மன்னார், வவுனியா வான் பரப்புகளில் மர்ம விமானம்
மன்னார், வவுனியா வான் பரப்புகளில் மர்ம விமானம் குறித்து தீவிர விசாரணைமன்னார் , வவுனியா வான் பரப்புகளில் மர்ம விமானம் ஒன்று பறந்து சென்றமை குறித்து விமானப்படையினர் பூரண விசாரணைகளினை மேற்கொண்டு வருவதாக விமானப்படை தலைமையகத்தின் பேச்சாளர் கப்டன் அஜந்த டி சில்வா நேற்று தெரிவித்தார்.நேற்று ஞாயிறு பிற்பகல் முதல் இரவு வரை மர்ம விமானம் ஒன்று மன்னார்,வவுனியா வான் பரப்புகளில் பறந்து திரிந்துள்ளதனை அவதானித்த வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமானப்படையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.அதனையடுத்து விமானப்படையினர் உடனடியாக மேற்கொண்ட தீவிர விசாரனைகளின் பின்னர் அவ் மர்ம விமானம் விமான்ப்படையினருக்குச் சொந்தமானதல்ல என ராடார் மூலம் அறிந்துகொண்டதாக கப்டன் அஜந்த டி சில்வா மேலும் தெரிவித்தார்.மேற்படி இம் மர்ம விமானம் குறித்து விமானப்படையினர் தீவிர விசாரனைகளினை மேற்கொண்டு வருவதோடு உசார் நிலையிலும் இருப்பதாகவும் அஜந்த டி சில்வா குறிப்பிட்டார்.இதேவேளை இம்மர்ம விமானம் குறித்து விசாரணைகளினை மேற்கொள்ளும் பொருட்டு விசேட விசாரனைக்குழுவொன்றும் விமானப்படைத்தளபதி வைஸ் ஏயார் மார்ஷல் டொனல் பெரேரா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.இவ் விசேட விசாரணைக்குழுவில் மூன்று சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
posted by Norsri @ Tuesday, November 07, 2006  
கிளிநொச்சி தாக்குதலுக்கு சர்வதேசம் கவலை
04 November 2006
சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் மேற்கொண்ட கிளிநொச்சித் தாக்குலில் வீடொன்று தாக்குதலுக்கு உள்ளானமை தொடர்பாக நிதி வழங்கும் இணைத்தலைமை நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
இணைத் தலைமை நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிளிநொச்சியில் நவம்பர் 2 ஆம் நாள் வீடு ஒன்றின் மீது வான்குண்டுத் தாக்குதல் நடத்தியதில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து இலங்கைக்கு உதவி வழங்கும் டோக்கியோ இணைத் தலைமை நாடுகளின் (ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே மற்றும் அமெரிக்கா) தூதுவர்கள் வருந்துகின்றனர். இந்த குண்டுத் தாக்குதலால் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை பாதிப்புக்குள்ளாகி நோயாளர்கள் வெளியேறி உள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்று இணைத் தலைமை நாடுகள் எதிர்பார்க்கின்றன.

இருதரப்பினருக்கு இடையே நம்பிக்கையை கட்டியெழுப்பி அடுத்தகட்டப் பேச்சுக்களை நடத்தக்கூடிய சூழ்நிலையில் மோதல்களை தவிர்க்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் அங்கு வெடித்த குண்டொன்றில் கிளிநொச்சி பொது மருத்துவமனையும் பாதிப்படைந்ததாக தெரிவித்துள்ள போதிலும், வெடித்த குண்டுக்கு யார் பொறுப்பு என்பது சுட்டிக்காட்டப்படவில்லை.
posted by Norsri @ Saturday, November 04, 2006  
கிளிநொச்சி, பூநகரியில் வான்குண்டுத் தாக்குதல்: 4 பேர் பலி
02 November 2006
சிறிலங்கா வான்படையின் கிபீர் விமானங்கள் இன்று கிளிநொச்சி நகரின் மீதும் பூநகரிப் பகுதியிலும் நடத்திய வான்குண்டுத் தாக்குதல்களில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

பூநகரிப்பகுதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.45 மணிக்கு இரு கிபீர் விமானங்கள் குண்டுகளை வீசின.

கிளிநொச்சி நகரின் மீது பிற்பகல் 2 மணியளவில் கிபீர் விமானங்கள் இரண்டு குண்டுகளையும் ரொக்கட் குண்டுகளையும் வீசின.

திருவையாற்றுப் பகுதியில் வீடு ஒன்றின்மீது வான்குண்டு வீழ்ந்து வெடித்ததையடுத்து நால்வர் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயமடைந்தார்.

மேலும் சிறிலங்கா விமானப்படையின் வேவு விமானம் கிளிநொச்சி நகர்மீது நீண்டநேரம் பறப்பில் ஈடுபட்டது.
posted by Norsri @ Thursday, November 02, 2006  
நோர்வேயில் பங்கேற்ற மாபெரும் தீப்பந்தப் பேரணி
01 November 2006
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் திங்கட்கிழமை (30.10.06) மாபெரும் தீப்பந்தப் பேரணியும் கவனயீர்ப்பு பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

ஒஸ்லோ மத்திய தொடரூந்து நிலைய முன்றலில் மாலை 6 மணிக்கு ஆரம்பமான தீப்பந்தப் பேரணி, நோர்வே நாடாளுமன்றத்தைச் சென்றடைந்து அங்கு கவனயீர்ப்பு பொதுக்கூட்டத்துடன் இரவு 7:30 மணிக்கு நிறைவடைந்தது.

தீப்பந்த ஊர்வலத்திற்கு முன்னதாக சிறிலங்கா அரச பயங்கரவாதக் கொடுமைகளால் அவலமுறும் தமிழீழ மக்களின் நிலைமைகளையும், தமிழீழ மக்களின் விடுதலை வேணவாவையும் வெளிப்படுத்தும் "ரப்" இசைப்பாடல்கள், தமிழ் இளையோர்களால் நோர்வேஜிய, ஆங்கில மற்றும் தமிழ் மொழிகளில் பாடப்பட்டன. கடுங்குளிரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவியபோதும் 1,000-க்கும் மேற்பட்ட ஒஸ்லோ வாழ் தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக பங்கேற்றிருந்தனர்.

சிறிலங்கா அரசாங்கத்தினால் கடந்த மூன்று மாதங்களாக ஏ-9 பாதை மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மக்கள்மீது திட்டமிட்ட பெரும் பொருளாதார நெருக்கடியும் மிக மோசமான மனிதாபிமான அவலமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜெனீவாப் பேச்சுக்களில் பாதை திறப்பு என்ற மக்களின் அடிப்படை மனித உரிமையைக்கூட கருத்தில் எடுக்க மறுத்துள்ளது ஜனநாயக முகத்திரை போர்த்திய சிறிலங்கா பேரினவாத அரசு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான இதயசுத்தியுடன் செயற்படவில்லை என்பது தோல்வியில் முடிவடைந்த ஜெனீவாப் பேச்சுக்களில் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
posted by Norsri @ Wednesday, November 01, 2006  
இராணுவத்தினரின் முன்னகர்வு முறியடிப்பு
மண்டூரில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்னகர்வு முறியடிப்பு மண்டூர் கம்பிக்கட்டுப் பாலத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவித்தாக்க முயன்ற சம்பவமொன்று முறியடிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி அரசியல்துறைப் பொறுப்பாளர் எஸ்.சீராளன் தெரிவித்தார். சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த குழுவொன்று, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் 4 கிலோமீற்றர் உள்நுழைந்து, தாக்குதல் நேரத்திற்காகத் தயாராகக் காத்திருந்துள்ளனர். விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை வழங்கிய தகவல்களையடுத்து, விடுதலைப் புலிகள் அப்பகுதியில் சுற்றிவளைப்புத் தேடுதலை மேற்கொண்டனர்.

அப்பகுதியில் மறைந்திருந்த அதிரடிப்படையினரை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலின்போது, அதிரடிப்படையினர் தப்பியோடியுள்ளனர். அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இன்னும் சிலர் காயமடைந்திருக்கலாமென நம்பப்படுகிறது
posted by Norsri @ Wednesday, November 01, 2006  
பிரதான செய்திகள்
பெட்டகம்
இணையசெய்திகள்
தொலைக்காட்சிகள்
வானொலிகள்
குழந்தைப் பெயர்கள்
தொழில்நுட்பம்
பாடசாலை தளங்கள்
அறுசுவை
MP3 பாடல்கள்
திருமண தளங்கள்
குழந்தைகளுக்கானபக்கம்
கவிதைகள்
தமிழ் சஞ்சிகைகள்
சினிமா பக்கங்கள்
சமூக இணைப்புகள்
நடிகர்கள் தளங்கள்
  • விளம்பரம்
  • கம்ப்யுட்டர் கல்வி
    நான் பார்ப்பவை



    free web counter

    Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

    Listed in tamizmaNam.com, 
 where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    More than a Blog Aggregator


    BLOGGER