இணைந்து இருங்கள்

[Eurobird 9] Star Vijay TV has launched in Europe again on Eurobird 9A (9 degree East)

வைகைப்புயலின் வேகம்...
05 January 2009
வரப்போகும் புத்தாண்டு வடிவேலுவுக்கு இடி கொடுக்கும் போலிருக்கிறது. தினந்தோறும் 7 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர் ஒரேயடியாக 9 லட்சமாக உயர்த்திவிட்டாராம்.
அதிர்ந்து போயிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதையும் தர தயாராக இருக்கிற சிலருக்கும், வடிவேலுவின் தினப்படி ஷெட்யூல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே அதை மட்டுமாவது சீரமைக்கும்படி கேட்கிறார்களாம். காலை 11 மணிக்கு படப்பிடிப்புக்கு வரும் வடிவேலு, சரியாக ஒரு மணிக்கு லஞ்ச் பெல் அடித்துவிடுவாராம். அதன் பின் ஸ்பாட்டுக்கு வருவது 3 மணிக்குதானாம். மாலை ஆறு மணிக்கெல்லாம் இவருக்கு பேக்கப் சொல்லிவிட வேண்டும். சொல்லாவிட்டாலும், காரில் ஏறி போய் கொண்டேயிருப்பாராம். இந்த கால நேரத்தை கொஞ்சம் மாற்றிக் கொண்டாலாவது பரவாயில்லை என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

எதற்கும் சம்மதிக்காத வடிவேலு தனது பிடிவாதத்தை தளர்த்த மறுப்பதால், வைகைப்புயலின் வாசல் படி மிதிக்கவே அஞ்சுகிறது திரையுலகம். விளைவு...? வில்லுவை தவிர வேறு படங்கள் எதுவும் கையில் இல்லை அண்ணாச்சிக்கு. சும்மாதானே இருக்கிறோம் என்று நினைத்திருப்பார் போல... சொந்த ஊருக்கு பிள்ளை குட்டிகளோடு போயிருக்கிறாராம்.

ஒருவேளை அரசியல் ஆசை பிடித்து ஆட்டுகிறதோ என்னவோ?
posted by Norsri @ Monday, January 05, 2009  
நான் கடவுள்: பிரமிக்க வைக்கும் பாலா!
இத்தனை நாள் காத்திருப்பை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார் இயக்குனர் பாலா. ஒரு மாதம், ஒரு வருடம் அல்ல... மூன்று நெடிய ஆண்டுகள்.
தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை பெற்றிராத புதிய அனுபவத்தைத் தர வருகிறது பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள நான் கடவுள் திரைப்படம். இதுவரை அந்தப் படத்தின் ஒரு சில ஸ்டில்கள்தான் பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன. படம் முழுவதும் முடியும் வரை அமைதி காத்த பாலா, இப்போது தன் பிஆர்ஓ நிகில் முருகன் மூலம் வேண்டிய மட்டும் ஸ்டில்களை அனுப்பியுள்ளார். ஒவ்வொரு புகைப்படமும் பாலாவின் மீது பிரமிப்பையும், படத்தைப் பற்றிய எதிரிப்பார்ப்பையும் கூட்டுவதாக உள்ளன. இந்தப் படத்தின் கதாநாயகன் ஆர்யா. மொத்தம் 3 ஆண்டுகள் ஜடா முடியும், நெஞ்சைத் தொடும் தாடியுமாக ஒரு விரதம் போல காத்திருந்தார். எவ்வளவோ பேர் அவரை அதைரியப்படுத்தியும், பாலா மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாக புதிய படங்களையும் ஒப்புக் கொள்ளவில்லை, தாடியையும் மழிக்கவில்லை. தன்னுடைய முதல் படம் இதுதான் என பெருமையுடன் சொல்லிக் கொள்வேன் என்கிறார் பெருமிதத்துடன். ராஜாவின் பிரமிப்பு!: படத்தின் முக்கியமான விஷயம், நமது இசைஞானியின் இசை. பாடல்களில் புதிய சாதனைப் படைத்திருக்கும் ராஜா, பின்னணி இசையில் பல காட்சிகளில் ஜெயமோகனின் வசனங்களுக்கு வேலை இல்லாமல் செய்திருக்கிறாராம். இந்தப் டத்தைப் பார்த்து பிரமித்துப் போன ராஜா, தன் விருப்பப்படி இசையமைக்க கொஞ்சம் அவகாசம் தேவைப்படும் என்றாராம். அதுமட்டுமல்ல, பின்னணி இசையில் புதிய பரிமாணம் காட்ட பிரபல இந்தி இசையமைப்பாளர் உத்தம் சிங்கையும் (தில் தோ பாகல் ஹை இசையமைப்பாளர்) தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளார். ஜனவரி 1ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் நான் கடவுள் இசையின் மூலம், 'நான் இசை' என உலகுக்கு அழுத்தமாக நிரூபிப்பார் ராஜா என்கிறார்கள் படக் குழுவினர். படத்தில் பணியாற்றிய அனைத்துக் கலைஞர்களும் இது ஒரு சர்வதேச தரத்தில் அமைந்துள்ள படம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதனால்தான் அனைவருமே சொந்தக் குரலில் பேசியிருக்கின்றனர். தசாவதாரத்தில் பெருமாளைப் புகழ்ந்து பாடல் புனைந்த வாலியின் பேனா, இந்தப் படத்தில் சிவனின் மகிமையைப் பாடலாக்கியிருக்கிறது. படத்தின் கதையை முன்கூட்டியே பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துள்ளார் பாலா. மூட நம்பிக்கை காரணமாக தன் மகனை காசியில் அனாதையாக விட்டுவிட்டு வருகிறார் ஒரு தந்தை. அந்தச் சிறுவன் காசியில் சாதுக்களின் மத்தியில் ஜடாமுடியும், தாடியும் வைத்துக் கொண்டு ஒரு இளம் சாதுவாக வளர்கிறான். தன் தவறை உணர்ந்த தந்தை மீண்டும் மகனைத் தேடி காசிக்கு வருகிறார். மகனின் நிலையைக் கண்டு அதிர்ந்து போய், மீண்டும் அவனை தன்னுடன் ஊருக்குக் கூட்டிச் செல்ல முயல்கிறார். மகனும் தமிழ்நாட்டுக்கு வருகிறான்... அதன் பிறகு நடக்கும் அடுத்தடுத்த அதிர்ச்சிகள்தான் படம, அந்த இளைஞனை 'கடவுளாக' மாற்றுகின்றன! கடவுளை 'தரிசிக்க' காத்திருக்கிறோம் பாலா!
posted by Norsri @ Monday, January 05, 2009  
நான் பாலாவின் ரசிகன் - மணிரத்னம்
மூன்று வருடங்களாக நான் கடவுள் படத்தின் மீது படிந்திருந்த எதிர்மறை விமர்சனங்களை துடைத்து எறிந்ததுடன், 2009 ஆம் ஆண்டின் புத்துணர்ச்சியூட்டும் விழாவாக அமைந்தது, நேற்று நடந்த நான் கடவுள் படத்தின் இசை வெளியீட்டு விழா.
படத்தின் ட்ரெய்லர் ஏற்படுத்திய பிரமிப்பு மாறாமலே அனைவரும் பேசினர். பாலாவால் தனது சினிமா வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தை மீண்டுமொருமுறை நினைவுகூர்ந்தார் சூர்யா. படத்தின் ட்ரெய்லர் பார்த்து நான் ஆச்ச‌ரியப்படவில்லை, ஏனென்றால் பாலாவின் படத்தில் வித்தியாசம் இல்லாவிட்டால்தான் ஆச்ச‌ரியம் என்றார், விக்ரம். பொதுவாக விழாக்களை தவிர்க்கும் மணிரத்னம், இந்த விழாவில் கலந்து கொண்டதுடன், மனம் திறந்து பாலாவை பாராட்டியது எதிர்பாராத நிகழ்வு. “நான் பாலாவின் ரசிகனாக இங்கு வந்திருக்கிறேன். பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாக்யரா‌ஜ் என்ற வ‌ரிசையில் அடுத்து பாலாதான். பாலா வந்த பிறகு தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை பார்க்க முடிகிறது. இதனை தொடர்ந்து செய்யுங்கள்” என்று பாராட்டினார். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பார்கள். பாலா சேதுவில் பதினாறடி பாய்ந்தார். நந்தாவில் முப்பத்தியிரண்டு அடி, பிதாமகனில் அறுபத்துநான்கு அடி, நான் கடவுளில் நூற்று இருபத்தியெட்டு அடி என்று நினைப்பீர்கள். ஆனால் அது கிடையாது. நூற்று இருபத்தியெ‌ட்டுட‌ன் பல சைபர்களை சேர்க்க வேண்டியிருக்கும் என தனது சிஷ்யனை வாழ்த்தினார், பாலுமகேந்திரா. விழாவுக்கு வந்த விஐபி-களை மேடையில் அமரவைத்து பார்வையாளர்களுடன் அமர்ந்து கொண்டார், பாலா. அவருடன் பார்வையாளர்கள் வ‌ரிசையில் காணப்பட்ட இன்னொருவர் படத்தின் வசனகர்த்தா, எழுத்தாளர் ஜெயமோகன். வருடத்தின் முதல்நாள் அனைவருக்கும் புத்துணர்ச்சியூட்டிய நிகழ்வாக பாலாவின் நான் கடவுள் இசை வெளியூட்டு விழா அமைந்ததை மறுப்பதற்கில்லை.
[ Friday, 02 January 2009, 05:44.17 PM GMT +05:30 ][ வெப்துனியா ]

பிரதான செய்திகள்
பெட்டகம்
இணையசெய்திகள்
தொலைக்காட்சிகள்
வானொலிகள்
குழந்தைப் பெயர்கள்
தொழில்நுட்பம்
பாடசாலை தளங்கள்
அறுசுவை
MP3 பாடல்கள்
திருமண தளங்கள்
குழந்தைகளுக்கானபக்கம்
கவிதைகள்
தமிழ் சஞ்சிகைகள்
சினிமா பக்கங்கள்
சமூக இணைப்புகள்
நடிகர்கள் தளங்கள்
  • விளம்பரம்
  • கம்ப்யுட்டர் கல்வி
    நான் பார்ப்பவை

    free web counter

    Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

    Listed in tamizmaNam.com, 
 where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    More than a Blog Aggregator

    BLOGGER