இணைந்து இருங்கள்

 
[Eurobird 9] Star Vijay TV has launched in Europe again on Eurobird 9A (9 degree East)


தசாவதாரம்'.
30 October 2006
ரவிக்குமார் இயக்கும் `தசாவதாரம்'.
தசாவதாரம் படத்தில் கமலஹாசன் 10 வேடங்களில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அசின், மல்லிகாஷெராவத், ஜெயப்பிரதா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் கமல ஹாசன் நடிக்கும் 10 வேடங்கள் என்ன என்பது தான் தமிழ் ரசிகர்களை இப்படத்தின் உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

கமலஹாசனின் நடிப்பிற்கு தீனி போட்ட மைக்கேல் மதன காமராஜன், அபூர்வசகோதரர்கள், இந்தியன், அவ்வைசண்முகி போன்ற படங்களில் வந்த கேரக்டர்கள் சற்று வித்தியாசப் படுத்தி காட்டப்படுமா அல்லது உலக சினிமா தரத்திற்கு இப்படத்தை கொண்டு செல்வதற்காக கமலஹாசன் மேலும் ஏதாவது முயற்சி செய்து புதுமை படைத்த கேரக்டர்களை உருவாக்கி உள்ளாரா என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடைகளை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

இப்படத்தில் உதார்மணி என்ற ஒரு கதாபாத்திரத்தில் டூரிஸ்ட் கைடாக நடிக்கிறார். நவீன காலத்திற்கேற்றவாறு மாடர்னாக வரும் டூரிஸ்ட் கைடாக இக்கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கம்பியூட்டரில் கதாபாத்திரத்தை வடிவமைத்து அதற்கு கமலஹாசன் உயிர் கொடுத்துள்ளாராம்.

அதே போன்று ஒரு அழகிய இளம்பெண் கதா பாத்திரத்திலும் இப்படத்தில் கமலஹாசன் நடிக்கிறார். அவ்வை சண்முகியில் வயதான மாமியாக வேடமிட்ட கமலஹாசன் இப்படத்தில் இளம்பெண் கேரக்டரில் நடித்து இளம் நெஞ்சங்களை கொள்ளை கொள்ளப் போகிறார் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இந்த கேரக்டரில் நடிப்பதற்காக மட்டும் கமலஹாசனுக்கு தினமும் 3 மணி நேரம் மேக்கப் செய்ய வேண்டியுள்ளதாம். இது தவிர இதுவரை பாத்திராத வகையில் வில்லன் கதாபாத்திரம் உள்பட 10 கேரக்டரில் கமலஹாசன் வரிந்து கட்டும் இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் மிகவும் பிரமாண்டமாக இயக்குகிறார்.

இப்படத்திற்கு தனது இசை மூலம் இந்தி ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கும் ஹிமேஷ் ரேஷ்மியா இசையமைக்கிறார். இவர் இசையமைப்பதில் மட்டுமல்ல பாடல்கள் பாடுவதிலும் கைதேர்ந்தவர் என்பது இந்தி ரசிகர்களுக்கு தெரியும். என்றாலும் தசாவதாரம் படத்திற்கு பிறகு தமிழ்ரசிகர்களையும் இவ்வாறு இசையால் கட்டிப் போடுவேன் என அடித்துக் கூறுகிறார்.

இப்படத்தை இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார் தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தை பிடித்தவர். பல கதாபாத்திரமுள்ள கதைகளை கமர்சியலாக எடுத்து படத்தை ஹிட் செய்வதில் இவருக்கு நிகர் இவர் எனலாம்.

இப்படத்தில் நடிகை அசினும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது தமிழ் ரசிகர்களுக்கு மேலும் ஆவலை தூண்டுகிறது. இவ்வாறாக பல எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு எப்போது வெளியாகும் ரஜினியின் சிவாஜியுடன் போட்டி போடுமா என்பது தான் விடை தெரியாத கேள்வியாக உள்ளது.
posted by Norsri @ Monday, October 30, 2006  
ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு தயாராகும் படையினர்.
29 October 2006
வடபோர் முனையில் தொடர்ந்தும் படைகள் மற்றும் கனரக ஆயுதங்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன.கடந்த சில நாள்களாக படைக்குவிப்பு நடைபெற்று வருகின்ற அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் புலிகளின் முன்னரங்க நிலைகள் மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி ஆட்லறி மற்றும் பல்குழல் பீரங்கி தாக்குதலை நடத்தி வந்த படையினர் இன்று ஞாயிறு காலையில் தமது எறிகணை வீச்சுக்களை அதிகரித்து உள்ளனர்.அதே வேளை தென்மராட்சியின் மீசாலை,கச்சாய்,கொடிகாமம்,எழுதுமட்டுவாள் பகுதிகளில் சிறீலங்கா படையினரால் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பாரிய ஆக்கிரமிப்பு போரை தொடுத்த போதெல்லாம் இவ்வாறு படைகுவிப்புகளையும், ஊரடங்கு சட்டம் பிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.
posted by Norsri @ Sunday, October 29, 2006  
உலகத்தின் முதலாவது பறக்கும் கார் ஏலத்தில் விற்பனை.
26 October 2006
உலகத்தின் முதலாவது பறக்கும் கார் 17.4 மில்லியன் டொலருக்கு ஏலத்திற்கு விற்பனையாகியது. 40 ஆண்டுகளுக்கு மேலாக பெரு முயற்சியெடுத்து தயாரிக்கப்பட்ட இந்தக்கார் மணிக்கு 600 கி.மீ வேகத்தில் பறக்கக் கூடியது. உலங்கு வானூர்தி போல ஏறி இறங்கக் கூடியது.
posted by Norsri @ Thursday, October 26, 2006  
ராடரால் கண்டு பிடிக்க முடியாத புதிய கடற்படைப்படகு
20 October 2006
ராடரால் கண்டு பிடிக்க முடியாத படி புதுவகையான கடற்படைப் போர்க்கப்பலை சுவீடன் உருவாக்கவுள்ளது. எதிர் வரும் 2007 ம் ஆண்டு விஸ்புய் என்று அழைக்கப்படும் முதலாவது யுத்தக்கப்பல் வெளிவரவுள்ளது. கடற்போர் வரலாற்றில் இக்கப்பலின் வரவு மிகப்பெரிய திருப்பமாகவும், அறிவியல் பாய்ச்சலாகவும் அமையுமென்று சுவீடனின் படைத்துறையினர் பெரு மகிழ்வு தெரிவித்துள்ளனர்.


ராடரின் கதிர்வீச்சு கடலில் அசையும் ஒரு கப்பலைக் கண்டு பிடிப்பதற்கு என்னென்ன தகவல்களை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்டிருக்கிறதோ அத்தனை தகவல்களையும் தோற்கடித்து ராடர் திரையிலேயே விழாது தாக்குதலை நடாத்தி திரும்ப வல்லது இக்கப்பல். அதேவேளை போர்க் கப்பல்களுக்கு கடலின் அடியில் பயணிக்;கும் நீர்மூழ்கிக் கப்பல்களால் ஆபத்துண்டு. அவை கடலில் நகரும் கப்பலின் அதிர்வையும், ஒலியையும் கேட்டு தாக்குதலை நடாத்தும். இயந்திரத்தால் எழும் ஒலியையும், பின்புறம் பிளப்பிறல் சக்கரத்தால் வரும் நீரலையையும் கட்டுப்படுத்துவதால் நீர்மூழ்கிக் கப்பல்களின் தாக்குதல்களையும் வெற்றிகரமாக தவிர்த்துவிடும். மேலும் வெப்ப அதிகரிப்பும் ஏற்படாதபடியால் வெப்பத்தால் வரும் ஏவுகணை தாக்குதல் அபாயமும் இதற்கு இல்லை. இதன் வயிற்றுப்புறத்தில் சிறிய படகுகள் மாதிரி ஆள் இல்லாது பயணிக்கும் நீர் மூழ்கிக் கப்பல்கள் உண்டு. இவை தண்ணீரில் மிதந்து செல்லும் கடல் கண்ணி வெடியை தேடி அழித்து கடல் வழியை துப்புரவு செய்யும். எதிரிகளுக்கு தவறான சமிக்ஞை கொடுத்து அவர்களை திசை மாற்றி, தாக்குதல் நடவடிக்கையிலும் இது துல்லியமான தாக்குதலை இலக்குத் தவறாமல் நடாத்தி தளம் திரும்பும் ஆற்றலுடையது. வழமையாக 100 கி.மீ தூரத்திலேயே ராடர் தகவல் கொடுக்கும். இக்கப்பலை 30 கி.மீ தூரம்வரை நெருங்கிய பின்னரே இது குறித்து ராடர் அறிய முயலும்.


கப்பலை அறிய முயலும் ராடர் அலைவரிசை சிதறலடைந்து திசைமாறிப் போய்விடுமாறு இதன் வடிவமைப்பு இருக்கும். ஒரு வைரக்கல்லை வெட்டும்போது வெட்டி வெட்டி அமைக்கப்படுவது போன்ற விளிம்புகளை இது கொண்டிருக்கும். முக்கியமான ஆயுதங்கள் யாவும் உட்புறத்தில் வைத்து மூடப்பட்டிருக்கும். கப்பலின் தயாரிப்பு மூலப்பொருளாக பீ.வி.சி பிளாஸ்டிக், நிலக்கரி கண்ணாடிநார், கடும் பிளாஸ்டிக்கான வினியூல் ஆகிய மூலப் பொருட்களால் இது தயாரிக்கப்படும்.


எனினும் இயந்திரங்களின் கியர் கேஸ் போன்றன இரும்பினால் ஆக்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாதது. ஆனால் இவை இரும்பினால் ஆக்கப்பட்டிருந்தால் ராடர் அதைச்சிறைப் பிடிக்கும். எனவேதான் ரிற்றானியம், கண்ணாடிநார் ஆகியவற்றால் இரும்பு உபகரணங்கள் மூடப்பட்டிருக்கும். மற்றைய கப்பல்களை விட அதிக வேகமும், எரிபொருள் சிக்கனமும் கொண்டது, சுவீடனின் விஸ்புய் என்ற இந்த யுத்தக்கப்பல். இது 72 மீட்டர் நீளமுடையது. 640 தொன் எடையுடையது. 2.4 மீட்டர் ஆழமும், 10.4 மீட்டர் அகலமும் கொண்டது. இரண்டு டீசல் மோட்டர்களும், 16.000 கி.வாட்சக்தியும் கொண்டது. 45 பேர் இருக்க முடியும், 35 கடல் மைல் வேகத்தில் ஓடவல்லது. இது போல மேலும் மூன்று கப்பல்களை சுவீடன் அதிகாரிகள் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது போல விஸ்புய் பிளஸ் என்ற கப்பல் 120 மீட்டர் நீளத்தில் தயாராக இருக்கிறது.
posted by Norsri @ Friday, October 20, 2006  
பிரதான செய்திகள்
பெட்டகம்
இணையசெய்திகள்
தொலைக்காட்சிகள்
வானொலிகள்
குழந்தைப் பெயர்கள்
தொழில்நுட்பம்
பாடசாலை தளங்கள்
அறுசுவை
MP3 பாடல்கள்
திருமண தளங்கள்
குழந்தைகளுக்கானபக்கம்
கவிதைகள்
தமிழ் சஞ்சிகைகள்
சினிமா பக்கங்கள்
சமூக இணைப்புகள்
நடிகர்கள் தளங்கள்
  • விளம்பரம்
  • கம்ப்யுட்டர் கல்வி
    நான் பார்ப்பவை



    free web counter

    Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

    Listed in tamizmaNam.com, 
 where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    More than a Blog Aggregator


    BLOGGER